நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சென்னை - கன்னியாகுமரி இடையே சேலம் மக்கள் குழு சார்பில் சைக்கிள் பயணம்

மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலி யுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் சென்னை- கன்னியாகுமரி இடையே சைக்கிள் பயணம் தொடங்க இருப்பதாக சேலம் மக்கள் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மானுஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற் றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக புகார் மனுக் களை கொடுத்தோம். எந்த நட வடிக்கையும் இல்லை. தமிழகத் தில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனைத் தொடர்ந்து ‘மாரி அம்மா உத்தரவு’ என்ற வாசகத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நடத்தினோம். அப் போதும் நடவடிக்கை இல்லை.

அதனைத் தொடர்ந்து எங்கள் சைக்கிள் பணத்தை, சேலத்தில் தொடங்கி, தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா, காஞ்சிபுரம் வழியாக சென்னையில் நிறைவு செய்திருக்கிறோம். இந்த 400 கிலோ மீட்டர் பயணத்தில் 17 கல்வி நிறுவனங்களுக்கு சென்று, நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் சென்னை மற்றும் பல மாவட் டங்கள் பெரும் பாதிப்பை சந்தித் துள்ள நிலையில், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற பெரிய அளவில் அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.

2 ஆயிரம் கி.மீ.

எனவே நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்ற வலியுறுத்தி பிப்ரவரி இறுதியில் சென்னை- கன்னியாகுமரி இடையே சுமார் 2 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது தருமபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் எம்.உமாசங்கர் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE