சிவகங்கை அருகே மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 5 பெண் தொழிலாளர்கள் மயக்கம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே மின்கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 5 பேர் மயக்கம் அடைந்தனர்.

சிவகங்கை அருகே கண்ணாரிருப்பு கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டம் மூலம் சிறுவாணி கண்மாய் வரத்துக் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு 74 பெண்கள் உட்பட 76 பேர் கால்வாய் தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது.

இதில் தொழிலாளர்கள் வரலட்சுமி(40), ஈஸ்வரி(45), மகமுநாச்சியார்(45), மாரிமுத்து(30), ஜானகி(40) ஆகிய 5 பேர் மீதுமின்கம்பிகள் விழுந்தன. இவர்கள் மின்சாரம் தாக்கி மயக்கம்அடைந்தனர். இவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், மருத்துவக் கல்லூரி டீன்ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்