கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் மீதான பாலியல் வழக்கில் வீடியோவைக் கைப்பற்ற போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி சிறையில் உள்ள அருமனை ஸ்டீபன் மற்றும் 7 பேர் மீது, திருவட்டாறு அருகே வீயன்னூரைச் சேர்ந்த 36 வயது பெண் பாலியல் புகார் அளித்தார். அதன்பேரில், திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட், காட்டாத்துறையை சேர்ந்த ஹென்சிலின், கலிஸ்டர் ஜெபராஜ் மற்றும் 3 இளைஞர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அந்த 3 இளைஞர்களும் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களைப் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும் எனவும்பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள கோழிப்பண்ணையில் வைத்து தன்னை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்ததாகவும், அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

மேலும்