பள்ளிக்கல்வி அதிகாரி மீது ரூ.8 லட்சம் மோசடி வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் சலாவுதீன். இவர், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (DEO) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

சலாவுதீன், குப்பம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன்(52) மகனுக்கு பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஜானகிராமனிடம் கடந்த 2019-ம் ஆண்டு தவணை முறையில் ரூ.8 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும்வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வந்ததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

இதுகுறித்து, ஜானகிராமன் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், சலாவுதீன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் இதுபற்றி விசாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்