திருக்குறளில் போற்றப்பட்ட குன்றிமணி மரங்கள் பாதுகாக்கப்படுமா? - அழிவின் விளிம்பில் இருந்து மீட்கக் கோரிக்கை

By எஸ்.முஹம்மது ராஃபி

தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன.

‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277.

இதன் பொருள்: புறத்தில் குன்றிமணி போல செம்மையான வராய் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பதாகும்.

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் பரவ லாகக் காணப்பட்ட குன்றிமணி மரங்கள் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி தரணி முருகேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குன்றிமணி மரங்கள் இரண்டு வகைப்படும். இதில் ஆனைக் குன்றி மணி அடிநாந்திரா பவோனினா (Adenanthera pavonnina) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மகரந்தத் தண்டில் உள்ள சுரப்பி யைக் குறிக்கும் சொல்லே அடிநாந் திரா என்பது. பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயிலிறகைப் போன்றது என்று பொருள். பவள நிறமுடைய இதன் விதைகளால், ஆங்கிலத்தில் கோரல் வுட் (coral wood) என்ற பெயர் உண்டானது.

ஆனைக் குன்றிமணி மரங்கள் 18 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளரக்கூடியது. கிளைகள் விரிந்து 10 மீட்டர் அளவில் பரந்திருக்கும். இதனடியில், உதிர்ந்திருக்கும் சிவப்பு நிற ஆனைக் குன்றிமணி களைக் கொண்டே, இம்மரத்தை எளிதாக அடையாளம் கண்டு கொள் ளலாம். இதன் இலைகள் வாகை இலைகளைப் போன்று இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. ஜன வரியில் இருந்து மார்ச் மாதங் களில் பூக்கள் பூக்கும். பூங்கொத் துகள் அதிகபட்சம் 20 செ.மீ. அள வில் இருக்கும். சோயா மொச் சையைப் போன்று இதன் விதை கள் இருபக்கமும் குவிந்த அமைப் புடையது. கறுப்புத் திட்டு இதில் இருக்காது.

இதன் இலையைக் கஷாயம் செய்து நாட்பட்ட வலி நோய்களுக் கும், கீல் பிடிப்புகளுக்கும், விதை களை அரைத்து கட்டிகளுக்கு பற்றிடவும் ஆயுர்வேத மருத்து வர்கள் பயன்படுத்துகின்றனர்.

குறளில் காணப்படும் ஒரே விதை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி மட்டுமே ஆகும். மேலும் ‘குப்பையில் எறிந்தாலும் குன்றுமணி கருக்காது’ என்ற பழமொழியும் இதற்கு உண்டு.

ஆனைக் குன்றிமணியின் விதை முழுவதுமாக சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், குன்றிமணியின் விதையில் சிவப்பாகவும் சிறிது திட்டாகக் கருப்பு நிறமும் இருக்கும். குன்றிமணியின் தாவரவியல் பெயர் Abrus precatorius.

பண்டைய காலத்தில் தங்கம் மற்றும் வைரங்களின் அளவு அறிய குன்றிமணியின் விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. மேலும் ஆபரணங்கள் செய்வதற் கும், சிறுவர்கள் பல்லாங்குழி விளை யாடுவதற்கும் பயன்படுவதுண்டு.

இதன் இலைகள் மற்றும் வேர் கள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலியைப் போக்க வும், வேர்களைக் கொண்டு வெண் குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்கவும் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட குன்றிமணி மரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளரும் தன்மைக் கொண்டது.

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டுவரும் குன்றி மணி மரங்களை பாதுகாக்க அரசு புதிதாக மரங்களை நட்டும், இருக் கிற மரங்களை பாதுகாக்கவும் வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்