தமிழகம்

ஹாட் லீக்ஸ்: ராஜ கண்ணப்பனின் அடுத்த குறி

செய்திப்பிரிவு

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோதே, “நான் ஜெயிச்சா மந்திரி” என்று சொன்னவர் ராஜ கண்ணப்பன். அந்த அளவுக்கு அவருக்கு தேர்தலுக்கு முன்பே ‘வலுவான’ உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அப்படி இருந்ததால் தான் பசையான போக்குவரத்துத் துறைக்கு அமைச்சரானார் கண்ஸ். இந்த நிலையில் தனது அடுத்த லட்சியத்தை அடைய மெல்ல அடிப்போட்டிருக்கிறாராம் கண்ணப்பன். தற்போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் அமைச்சர். நிர்வாக வசதிக்காகவும் கோஷ்டிகளைச் சமாளிக்கவும் மாவட்டங்களை இரண்டு, மூன்றாக பிரித்து வைத்திருக்கிறது திமுக. ஆனால், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லாததால் ராமநாதபுரத்தையும் சிவகங்கை மாவட்டத்தையும் இன்னும் பிரிக்காமல் இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்ட கண்ணப்பன், “மானாமதுரை, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் தனியாக பிரித்து ஒருமாவட்டமாக்கி என்னை அதன் செயலாளராக்குங்கள். அது முடியாவிட்டால் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பையாவது என்னிடம் விடுங்கள்” என்று தலைமைக்கு சேதி அனுப்பி இருக்கிறாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT