2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் நாய்கள் கருத்தடை மையம் திறக்கப்படுமா?- திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோணக்கரை நாய்கள் கருத்தடை மையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் கூறியது:

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த 65 வார்டுகளிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தெரு நாய்கள் ஏராளமாக பெருகிவிட்டன. அவை தெருக்களில் நடந்து செல்வோரையும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திக் கடிக்கின்றன. இது மட்டும் இன்றி, உணவு கிடைக் காமலும், விபத்துகளில் சிக்கியும் நாய்கள் இறப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

முன்பு பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி பணிமனை வளாகத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வந்தபோது, அங்கு தெருநாய்கள் பிடித்துச் செல்லப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனால், தெரு நாய்களின் பெருக்கம் ஓரள வுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், போதிய இடவசதி இல் லாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த மையம் மூடப்பட்டது.

அதன்பின்னர், உறையூர் கோணக்கரை சுடுகாடு வளாகத்தில் ரூ.93 லட்சத்தில் புதிதாக நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டு, 2018-ல் செயல்பாட்டுக்கு வந்தது. 254.73 சதுர மீட்டரில் கட்டப் பட்டுள்ள இந்த மையத்தில் ஒரேநாளில் 30 நாய்கள் வரை கருத்தடை செய்ய முடியும். ஒரே நேரத்தில் 100 நாய்கள் வரை இங்கு தங்க வைக்க இடவசதியும் உள்ளது. எனினும், இந்த மையம் முறையாக செயல்படாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கிறது. இதனால், தற்போது மாநகரில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உறையூர் பகுதியில் 7 வயது சிறுவனை தெரு நாய் கடிக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தச் சிறுவன் மட்டுமின்றி அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களில் 15-க்கும் மேற்பட்டோர் நாய்க் கடிக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியில் சென்று விசாரணை நடத்தவோ, அங்கு சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் பெருகி, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக் கவும், அவற்றுக்கு கருத்தடை செய்ய வசதியாக, மூடப்பட்டுள்ள கோணக்கரை நாய்கள் கருத்தடை மையத்தை திறக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கூறியது:

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடித்து, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து, ரேபீஸ் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வரப்பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

சரியான விண்ணப்பதாரருக்கு நாய்கள் கருத்தடை மையத்தைச் செயல் படுத்த அனுமதி வழங்கப் படும். இன்னும் 10 நாட்களில் கருத்தடை மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE