ரத்து செய்யப்பட்ட, இறந்தவர்களின் குடும்ப அட்டைகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை: சர்ச்சையில் ரேஷன் கடைகள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட, இறந்தவர்களின் குடும்ப அட்டைகளையும் கரோனா நிவாரணத் தொகை பெறுவதற்கான பட்டியலில் சேர்த்துள்ளதால் ரேஷன் கடைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகையைாக வழங்கப்படுகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, தேதி வாரியாக ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன்கடைகள் மூலம் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.80.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ரத்து செய்யப்பட்ட ஒருநபர் குடும்ப அட்டைகள் மற்றும் இறந்தவர்களின் குடும்ப அட்டைகளும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தான் நிவாரணத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது,’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்