அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், பெஞ்சமின் பின்னடைவு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் சுற்று நடந்துவரும் வேளையில் அமைச்சர்கள் பெரும்பாலும் வெற்றி முகத்தில் இருக்கின்றனர். ஆனாலும் 4 அமைச்சர்கள் பின்தங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 126 இடங்களிலும், அதிமுக கூட்டணி 89 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. அமைச்சர்களில் பெரும்பாலானோர் முன்னிலையில் உள்ளனர். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

ஆனாலும், 4 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்திக்கின்றனர். தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1,900 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

ராயபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்