திருநெல்வேலி மாவட்டம் வள்ளி யூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் (70) நேற்று சரணடைந்தார்.
வள்ளியூர் அருகே சின்னம் மாள்புரத்தை சேர்ந்த வில்லியம் மகன் ஜோனதான் ராபின்சன். சின்னம்மாள்புரத்தில் கிரேல் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற் றோர் இல்லத்தை நடத்திவந்தார். இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங் களுக்கு அழைத்துச் சென்று ஜோனதான் ராபின்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங் களூரிலுள்ள ஜஸ்டிஸ் அன்ட் கேர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்திருந்தது. இந்த புகாரின்பேரில் ஜோனதான் ராபின்சன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே இங்கிலாந்துக்கு ஜோன தான் ராபின்சன் சென்றுவிட்ட தால், அவரை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை.
பிடிவாரண்ட் பிறப்பிப்பு
இந்த வழக்கு வள்ளியூரி லுள்ள நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தபோது ஜோன தான் ராபின்சனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதேநேரத் தில் சர்வதேச தேடுதல் அறிவிக் கையை இவருக்கு எதிராக காவல்துறை வெளியிட்டது. இதையடுத்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜோனதான் ராபின்சன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேநேரத்தில் ஜோனதான் ராபின்சன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவாதம் அளித்ததால், அவருக்கு எதிரான சர்வதேச தேடுதல் அறிவிக்கையை திரும் பப்பெறுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று ஆஜராக உத்தரவு
வள்ளியூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜனவரி 4-ம் தேதி அன்று வரவிருந்தது. இந்நிலையில் மாஜிஸ்திரேட் ரஸ்கின்ராஜ் முன் னிலையில் ஜோனதான் ராபின் சன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு முன்னதாக மேற் கொள்ள வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை மாஜிஸ் திரேட் ரஸ்கின்ராஜ் வெள்ளிக் கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார். அப்போது நீதிமன் றத்தில் ஆஜராகுமாறு ஜோன தான் ராபின்சனுக்கு உத்தரவிடப் பட்டது.