பிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்

புதுவை ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் வைத்திலிங்கம் எம்.பி.யின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.

பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, புதுவையில் அவர் வரும் வழிகள் நெடுகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலைகளுடன் நட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமரை வரவேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை.

மோடி புதுச்சேரிக்கு வந்து செல்லும் வரை அவர் வரும் வழிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதிகளில் இருந்த கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.

ஜிப்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு தேசிய விருது பெற்ற வில்லியனூர் கைவினைக் கலைஞர் முனுசாமியின் புவிசார் குறியீடு பெற்ற டெரகோட்டா பொம்மையைத் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை வழங்கினார்.

ஜிப்மரில் செல்போன், பேனா, கைப்பைகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 5 கட்டப் பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE