மது அருந்தி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: புதுச்சேரியில் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம் மீறினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மீண்டும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது. மீறினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்துறை செயலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் திருத்திய மோட் டார் வாகனச் சட்டம், புதுச்சேரியில் கடந்த 2019 செப்டம்பர் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இருப்பினும் புதுச்சேரி அரசால் உரிய அறி விப்பு வெளியிடப்படாததால், இச்சட்டத்தின் கீழ் புதிய அபராதங்கள் உள்ளிட்டவை வசூலிக்க இயலவில்லை. மேலும், ஒவ்வொன் றுக்கும் நீதிமன்றத்துக்கு அனுப்பு வதால் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் காலதாமதம் ஏற் பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது திருத்திய மோட்டார் வாகனச் சட்டம்தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டோவில் அதிகக் கட்டணம் வசூலிப்பது,பேருந்துகளில் படியில் பயணம்,நான்கு சக்கர வாகனங்களின் கண் ணாடிகளில் கருப்பு திரை ஒட்டுதல், விதிமீறிய வாகனஎண் பலகை, முதலுதவி பெட்டி யில்லாத வாகனம், வேகக்கட்டுபாடு கருவியற்ற மற்றும் தீயணைப்பான் இல்லாத பள்ளி வாகனம் உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ. 200 லிருந்து ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். (ஏற்கெனவே ரூ.100 லிருந்து ரூ. 300)

ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டினாலும், இருவருக்கு மேல் பயணித்தாலும் ரூ. 1,000 மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமத் தடை செய்யப்படும். (ஏற்கெனவே ரூ. 100 முதல் ரூ. 300), காரில் சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.1,000 (ஏற்கெனவே ரூ. 100 முதல் ரூ. 300 வரை), செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி னால் ரூ. 1,000 (ஏற்கெனவே ரூ. 100முதல் ரூ. 300 வரை), உரிமமின்றி வாகனம் ஓட்டினால் ரூ. 5,000 (ஏற்கெனவே ரூ. 500) அபராதம் விதிக்கப்படும்.

வேக வரம்பை மீறினால் ரூ.1,000 முதல் ரூ. 4,000 வரை (ஏற்கெனவே ரூ. 400), அதிக சுமைக்குரூ. ரூ.2,000 டன்னுக்கு ரூ.2,000(ஏற்கெனவே ரூ. 2,000), இசைவாணையின்றி ஓட்டினால் ரூ. 10,000 (ஏற்கெனவே ரூ. 2,000), காப்பீடின்றி ஓட்டினால் ரூ. 2,000 முதல் ரூ. 4000 வரை (ஏற்கெனவே ரூ.1000) உள்ளிட்ட 73 குற்றங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 அல்லது 6 மாதம் சிறை (ஏற்கெனவே ரூ.2,000 அல்லது 6 மாதம் சிறை) தண்டனை விதிக்கப்படும்.

‘சிக்னல் ஜம்பிங்’ ரூ. 1,000 (ஏற்கெனவே ரூ. 100) அபராதம் விதிக்கப்படும் அல்லது ஓராண்டுக்கு குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

மேலும், ஒரு வழிப்பாதையில் தவறான பயணம், வேக வரம்பை மீறுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதலுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை அல்லது ஒராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை (ஏற்கெனவே ரூ. 100),18 வயதுக்கு கீழ் உள்ளவர் வாகனம்ஓட்டினால் ரூ. 25,000 அபராதம், வாகனப் பதிவு நீக்கம் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 25 வயது வரை வாகனம் ஓட்டத் தடை உள்ளிட்ட 77 குற்றங் களுக்கு நீதிமன்றத்தின் மூலம் அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும்.

அபராதம் வசூலிப்பதற்காக 16 இ-செலான் இயந்திரங்கள் அரசிடம் இருப்பில் உள்ளன. இதில்விரைவில் ஏடிஎம் அட்டை அல்லதுஇணையச் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டிஜி லாக்கர் அல்லது அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் ஆவணங்களை காண்பிக்க லாம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக் குமார், ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 secs ago

சினிமா

41 mins ago

இந்தியா

53 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்