சுரப்பா வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை பொறுமை காக்க வேண்டும்: விசாரணை ஆணையத்துக்கு பேராசிரியர்கள் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு இடைக்கால தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளதால், அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விசாரணை ஆணையம் பொறுமை காக்க வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத் தலைவர் ஐ.அருள்அறம், செயலாளர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக் கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இதுவரை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவ்வித முகாந்திரத்தையும் கண்டறியவில்லை என்பது எங்களுக்கு தெரியவருகிறது.

தவறான முன்னுதாரணம்

மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு ஒரு பல்கலைக்கழகத் தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திகழும் துணைவேந்தருக்கு சம்மன் அனுப்புவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறோம். பணியில் உள்ள துணைவேந்தரை விசாரணைக்கு ஆஜராகச் செய்வது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. அது அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்து வதாக அமையும்.

நம்பிக்கை உள்ளது

தன் மீது அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசார ணைக்கு இடைக்கால தடை கோரிஉயர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் சுரப்பா வழக்கு தொடர்ந் துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள அந்த வழக்கில் நாங்களும் இணைந்துள்ளோம். நீதித் துறை மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒரு நபர் ஆணையம் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE