திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் இளைய சகோதரர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசித்து வந்தவர் சீனுவாசன்(75).காங்கிரஸ் பிரமுகரான இவர், அதே பகுதியில் கிரஷர் தொழில் நடத்தி வந்தார். இவர் பாமக நிறுவனர் ராமதாஸின் இளைய சகோதரர் ஆவார்.கடந்த சிலவாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர்நேற்று தனது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து தகவலறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ் ஆகியோர் அவரது இல்லத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர். கடந்த 2006-ம் ஆண்டு, அமைச்சர்சி.வி.சண்முகம் வீட்டுமுன்பு நடந்த கொலை தொடர்பான வழக்கில் சிபிஐயால் சீனுவாசன் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
9 mins ago
இந்தியா
52 mins ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago