கரோனா மந்த நிலையிலும் 2020-ம் ஆண்டில் 359 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார்: 80% மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா மந்த நிலையிலும் 2020-ம்ஆண்டு 359 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 10,136 புகார்களைப் பெற்று 80 சதவீத புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல்ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ், மத்திய குற்றப்பிரிவு,காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள், நில அபகரிப்பு குற்றங்கள், சீட்டு மற்றும்கந்துவட்டி குற்றங்கள், வீடியோ திருட்டு, பாலியல் தடுப்புப்பிரிவு,மோசடி, ஆள்மாறாட்டம், வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போன்றகுற்றங்கள் தொடர்பான வழக்குகளை இந்த பிரிவு கையாள்கிறது. மேலும், வேலைவாய்ப்பு மோசடி,போலி பாஸ்போர்ட் - விசா குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் கையாண்டு வருகிறது.

கரோனா தொற்று காரணமாக மந்த நிலை ஏற்பட்டாலும் 535 குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 359நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 385 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களுக்கு முன்விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 29 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 10,136 மனுக்களில் 8,414 மனுக்கள் (80 சதவீத மனுக்கள்) விசாரணைக்குரிய நடவடிக்கையுடன்விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. வங்கி மோசடி தடுப்புப் பிரிவுவிசாரணை வழக்குகளில் உரிய நடவடிக்கையின்பேரில், ரூ.2.12 கோடியை முடக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.40 லட்சம்திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் இழந்ததொகையினை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இதுவரை 17 கார்கள் மற்றும் 75 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளது.

நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு மற்றும் மோசடி தடுப்புப்பிரிவு சொத்துகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்துரூ.5.75 கோடி முடக்கப்பட்டதுடன் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட 6 கார்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிலமோசடி தடுப்புப்பிரிவு வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.35.50 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்டு, திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE