சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு: நவ.11 முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

By கி.மகாராஜன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரனை தொடங்கும் என சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கின்றோம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.

எங்களுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு அனைத்துக்கும் கட்டுப்படுவோம் என்றும் ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், "நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோன். வழக்கில் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டனர்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர். இவர்கள்தான் தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது எனத் தெரியவருகிறது. மேலும் சிபிஐ விசாரணையிலும் ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நவம்பர் 11-ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" எனக் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் புகார் அடிப்ப்டையிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்படுகிறதா?அப்படி இருந்தால் FIR பதிவு செய்யக்கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்