காளையார்கோவில் அருகே கீழடி போன்று இலந்தகரையிலும் நகர நாகரீகம்: அழகப்பா பல்கலைக்கழக விரிவுரையாளர் தகவல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழடி போன்று இலந்தகரையிலும் நகர நாகரீகம் இருந்துள்ளது என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர் தி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர், தொல்லியல் ஆர்வலர் இலந்தகரை ஜெமினி ரமேஷ் உதவியுடன் காளையார்கோவில் அருகே இலந்தகரை பகுதியை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர் தி.பாலசுப்ரமணியன் கூறியதாவது:

இலந்தகரையில் 10 ஏக்கரில் பானை ஓடுகள், பவளபாசிகள், கல் பாசிகள், கண்ணாடி பாசிகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த பகுதிக்கு அருகிலேயே கல்வட்டம், நடுக்கல், முதுமக்கள்தாழிகள் போன்றவையும் காணப்படுகின்றன. இலந்தகரை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, கல், கண்ணாடி பாசிகள் செய்யும் மிகப்பெரிய தொழில் தளமாக இருந்திருக்கலாம்.

மேலும் காளையார்கோவில் பகுதியில் பல இடங்களில் கண்மாய் மராமத்து பணிகளின்போது செங்கல், தரைத்தள கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் இலந்தகரையில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளி, முத்திரை நாணயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழகர் கால நாணயம் கிடைத்துள்ளன.

இலந்தகரையை சுற்றியுள்ள நல்லேந்தல், புரசடைஉடைப்பு, வேளாங்குளம், கருங்காலி உள்ளிட்ட பகுதிகளில் கல்வட்டம், நடுகல் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் கல்வெட்டுகள், சூலக்கற்கள், கழுமரங்கள், இடிந்தநிலையில் உள்ள கோயில்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

இந்த பகுதியில் உள்ள கல்வெட்டுகள், நில அமைப்பில் உள்ள மாற்றங்கள், கோயில் இடிபாடுகளை வைத்து பார்க்கும்போது 10-ம் நூற்றாண்டு வரை இப்பகுதி சிறப்பாக இருந்துள்ளது.

இப்பகுதியில் இருந்து 40 கி.மீ.-ல் கடற்கரை உள்ளது. ரோமானியர்கள், அரேபியர்கள் இலந்தகரையில் வாணிபம் செய்திருக்க வாய்ப்புள்ளது.
இப்பகுதி பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ளன.

இதனால் அரசு முழுமையாக அகழாய்வு செய்வதில் எந்த இடையூறும் இருக்காது. உலகில் தோன்றிய முதன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம். தற்போது மறைந்துபோய்விட்டது. இழந்துபோன நமது கலாச்சாரத்தை இந்த இலந்தகரை மீட்டு கொடுக்கும் என்பதில் ஐயமும் இல்லை, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

வணிகம்

32 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்