168 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக தஞ்சாவூர் பெரிய கோயில் நடைதிறப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நேற்று திறக்கப்பட்டது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 18-ம் தேதி, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிப்பது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், 168 நாட்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோயில், பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது.

இதையடுத்து, பெரிய கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, 10 வயதுக் குள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோயிலுக்கு வர அனுமதி கிடையாது. மேலும்,முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்படுகிறது. அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தபிறகு, சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில் நடை நேற்று திறக்கப் பட்டதையடுத்து, காலை 6 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்த பக்தர்கள் உடனடியாக கோயிலி லிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கும்பகோணத்தில்...

கும்பகோணம் ஆதிகும்பேஸ் வரர் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில், 108 திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களான சாரங்கபாணி கோயில், நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள், உப்பிலி யப்பன் கோயில், நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோயில், திருநறையூரில் உள்ள மங்கள சனீஸ்வரன் கோயில், திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் உட்பட வழிபாட்டு தலங்கள், பரிகாரத் தலங்கள், நவக்கிரக தலங்கள் என அனைத்து கோயில்களும் நேற்று காலை திறக்கப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக் கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE