குடும்பத்தினரை கொலை செய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

கடன் தொல்லையால் தனது குடும்பத்தினரை கொலை செய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நந்தனார் தெரு, ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் தாமோதரன் (எ) பிரகாஷ் (வயது 40). இவர் பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி தீபா(35). இவர்களுக்கு ரோஷன்(7), மீனாட்சி(4) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இவர்களுடன் தாமோதரனின் தாய் சரஸ்வதியும்(60) வசித்து வந்தார்.

தாமோதரன் தான் நடத்தி வந்தஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகரித்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர் 2017 டிசம்பர் 12-ல் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும்கத்தியால் தீபாவை கொலை செய்துள்ளார். தீபாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த தாய் சரஸ்வதியையும் கொலை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேரையும் குத்தி கொலைசெய்தார். இதையடுத்து கடன்தொல்லையால் பாதிக்கப்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, தாமோதரன்தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டுதற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவலறிந்த தீபா குடும்பத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் தாமோதரன் தவிர்த்து அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாமோதரன் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தாமோதரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

54 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

20 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்