மகப்பேறு மையத் திறப்புவிழாவில் சீன பிரதமர் சூ என்லாய். 
தமிழகம்

1956-ல் மாமல்லபுரம் வந்தபோது மகப்பேறு மையத்தை திறந்துவைத்த சீனப் பிரதமர் சூ என்லாய்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்

மாமல்லபுரத்துக்கு கடந்த 1956-ல் வருகை தந்த சீன பிரதமர் சூ என்லாய், குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் மகப்பேறு குழந்தை கள் மையத்தை திறந்துவைத் தார். தற்போது அக்கட்டிடம் இடிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக அமைக்கப்பட் டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தியா- சீனாவுடனான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக, மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச உள்ள னர். இதற்காக, இரு தலைவர் களும் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு வரும் 11 மற்றும் 12-ம் தேதி வருகை தர உள்ளனர். மேலும், பல்லவ மன்னர் கால கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களையும் அவர் கள் நேரில் பார்வையிட உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1956-ம் ஆண்டு, அப்போதைய சீனாவின் பிரதமராக இருந்த சூ என்லாய், மாமல்லபுரத்துக்கு வருகை புரிந் தார். அவருடன் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள கைவினை சிற்பங்களை கண்டு ரசித்துவிட்டு, சுகாதாரத் துறையின் மாதிரி கிராமமாக தேர்வு செய் யப்பட்ட குழிப்பாந்தண்டலம் கிரா மத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேறு மையத்தை திறந்து வைத்தார். இதேபோல் மானாம்பதி, நெறும்பூர் மற்றும் பூஞ்சேரி பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்ததாக தெரி கிறது.

இதை உறுதிப்படுத்தும் வகை யில், குழிப்பாந்தண்டலம் மகப்பேறு மையத்தில் கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில், சூ என்லாய் அக்கட்டிடத்தை திறந்து வைத்தார் என்பதற்கான ஆதார மாக அவரது பெயர் பொறிக்கப் பட்டிருந்தது.

கிராம மக்களுக்கு பசு மாடுகள்

தற்போது, பராமரிப்பு இல்லாததால் அந்தக் கல்வெட்டு யாரிடம் உள்ளது எனத் தெரிய வில்லை. எனினும், அப்பகுதி கிராம மக்கள் மேற்கண்ட நிகழ்ச் சியை உறுதி செய்ததோடு, அச் சமயம் கிராம மக்களுக்கு பசு மாடு களும் வழங்கப்பட்டதாக கூறு கின்றனர்.

மேலும், சூ என்லாய் திறந்து வைத்த கட்டிடம் ஆண்டுகள் பல கடந்ததால், இடிக்கப்பட்டு அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அமைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்ல புரத்துக்கு வருகை புரிவதால், சூ என்லாய் வந்த இடத்தை நினைவுகூரும் வகையில் குழிப் பாந்தண்டலம் கிராமத்துக்கும் சீன அதிபர் வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

SCROLL FOR NEXT