தமிழகம்

ஜெ. வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் சுமுக சூழல் நிலவுவதாக போலீஸ் தகவல்

எஸ்.கே.ரமேஷ்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதை ஒட்டி தமிழகம் - கர்நாடக எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநில எல்லையில் எஸ்.பி. ரமேஷ் பாலு, டி.எஸ்.பி. பலராம கவுடா, 25 உயர் அதிகாரிகள், 4 பட்டாலியன் போலீஸ் உட்பட 150 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், தமிழக எல்லையில் ஏடிஎஸ்பி ஆறுமுக சாமி தலைமையில், ஏ.எஸ்.பி. ரோகினி பிரியதர்ஷினி உட்பட 509 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுகவினர் யாரும் பெங்களூரு செல்ல வேண்டாம்; பொறுமையாக இருக்க வேண்டும் என கட்சித் தலைமை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில அதிமுக வாகனங்கள் பெங்களூரு நோக்கிச் செல்கின்றன. வாகன தணிக்கைக்குப் பின்னர் அவை பெங்களூருவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் பயணிகள் அளவு குறைவாகவே உள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT