பெண் நீதிபதி காயமடைந்த விவகாரம்: கார் ஓட்டுநரின் எதிரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலா? - 10 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்ட சம்பவம், அவரது கார் ஓட்டுநரின் எதிரிகள் மூலம் நடத்தப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லதா மார்ச் 18-ல் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவத்தடி என்ற இடத் தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் 4 பேர் தாக்கிய தில் நீதிபதியும், கார் ஓட்டுநரும் காய மடைந்தனர். இருவரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க நாகப்பட்டினம் ஏஎஸ்பி சசாங்சாய் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இப்படையினர் வேளாங்கண்ணி முதல் வேதாரண்யம் வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் சந்தேகப்படும் பலரிடமும் விசாரித்து வருகின்றனர்.

சந்தேகத்தின்பேரில், வேளாங் கண்ணியைச் சேர்ந்த இருவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் வெளிப்பாளை யம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு நேற்று மாலை வரை விசாரிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏஎஸ்பி சசாங்சாய், நீதிபதி லதாவிடம் விசாரித்துள்ளார். அப்போது, அவர் தனக்கு ஏதும் முன்விரோதம் இல்லை யென்றும், யார் மீதும் சந்தேகம் இல்லை யென்றும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, கார் ஓட்டுநர் சதீஷ் குமாரிடம் சசாங்சாய் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அவர் மீது அடிதடி வழக்கு உட்பட சில புகார்கள் இருப்பதை அறிந்த போலீஸார், அவரது எதிரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்நிலையில் நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நேற்று 2-வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குற்றவாளி கள் கைது செய்யப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE