துருக்கி சென்றுள்ள தமிழக மாணவர்கள் பத்திரமாக திரும்புவார்கள்: பெற்றோர்களுக்கு அரசு ஆறுதல்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 148 மாணாக் கர்கள் துருக்கி நாட்டிலுள்ள டிராப்சோன் என்ற இடத்துக்கு சென்றுள்ளனர். இதில் 11 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். துருக்கியில் திடீரென ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் காரணமாக அங்குள்ள மாணவ மாணவியர்கள் பாதுகாப்பு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மாணவ மாணவியரின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, துருக்கியிலுள்ள தூதரக அதிகாரிகளை தமிழக அரசின் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். டிராப்சோன் பகுதி யில் உள்ள இந்திய மாணவ மாணவியர் அனைவரும் பாதுகாப் பாக உள்ளனர் என்றும் விளை யாட்டுப் போட்டிகள் நிறைவு பெறும் ஜூலை 18 அன்று இந்தி யாவைச் சேர்ந்த மாணவ மாணவி கள் அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைப்பதாக தமிழக அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். எனவே, விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்கச் சென்றுள்ள மாணாக்கர்களின் பெற்றோர் அச்சமோ கவலையோ அடைய வேண்டியதில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE