கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் திருடப்பட்ட பெண் குழந்தையை மீட்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசவ வார்டில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகாததால் குழந்தையை தூக்கிச் சென்ற பெண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பூந்த மல்லி ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (30). இவரது மனைவி சரிதா (24), பிரசவத்துக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. வார்டில் சரிதாவுக்கு துணையாக மனையாத்தாள் என்ற மூதாட்டி இருந்தார்.
சனிக்கிழமை காலை வார்டுக் குள் வந்த ஒரு பெண், சரிதாவின் தோழி என கூறிக்கொண்டு குழந்தையை தூக்கிக் கொஞ்சி னார். சிறிது நேரத்தில் குழந்தை யுடன் அந்தப் பெண் மாயமாகி விட்டார். பட்டப்பகலில் குழந்தை திருடப்பட்ட சம்பவம், மருத்துவ மனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரிதா கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக பிரசவ வார்டில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
‘ஒரு பெண் உள்ளே வந்து குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி தெளிவு இல்லாமல் பதிவாகியுள்ளது. அதனால், குழந்தையை தூக்கிச் சென்ற பெண் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை’ என போலீஸார் தெரிவித்தனர். ஆனால், கண்காணிப்பு கேமராக் களில் எந்தக் காட்சியும் பதிவாக வில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ மனை நிர்வாகத் தரப்பில் கூறு கையில், ‘‘குழந்தை காணாமல் போன பிரசவ வார்டில் 7 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
குழந்தை காணாமல் போன பிறகு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ய வந்தனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேமராவில் காட்சிகள் எதுவும் பதிவாகாமல் இருந்தது தெரிந்தது. இதனால், குழந் தையை எடுத்துச் சென்றவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது’’ என்றனர்.
சென்னை மாநகர போலீஸ் கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையிலான போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
‘‘குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன. சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கெனவே குழந்தை திருட்டில் ஈடுபட்டவர்களையும் விசாரிக்க உள்ளோம்.
சரிதா, கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அதனால் அவரது கணவர் தினேஷையும் விசாரிக்க இருக்கிறோம்’’ என போலீஸார் தெரிவித்தனர்.
குழந்தை திருட்டு சம்பவத் துக்குப் பிறகு, மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சாதாரண உடையிலும் கண்காணிக்கின்றனர்.
பிரசவ வார்டுக்கு வெளியே போலீஸார் நிறுத்தப்பட்டுள் ளனர். அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வார்டுக் குள் செல்ல அனுமதிக்கப்படு கின்றனர்.
குழந்தையுடன் வெளியே செல்லும்போது டிஸ்சார்ஜ் சம்மரியை சரிபார்த்த பிறகே அதிகாரிகள் அனுப்புகின்றனர்.