நிலத்தின் வழிகாட்டி மதிப்பு குறைப்பு, பதிவுக் கட்டணம் அதிகரிப்பு: மக்களுக்கு பெருமளவு பலன் கிடைக்குமா?

தமிழகத்தில் இன்று முதல் சந்தை வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கட்டுமான சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதே நேரம் பதிவுக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால் பலன் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.மணிசங்கர்:

சந்தை வழிகாட்டி மதிப்பு குறைவதால் பத்திரப்பதிவு அதிக ரிக்கும். பல இடங்களில் சந்தை மதிப்பை விட, வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது வழிகாட்டி மதிப்பு குறைவதால், பத்திரப்பதிவு அதிகரித்து அரசுக் கும் வருவாய் அதிகரிக்கும். இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம், பதிவுக் கட்டணம் உயர்வால் வீடு, நிலம் வாங்குவோருக்கு பெரிய அளவில் பலன் கிடைக்காது.

கிரெடாய் சென்னை தலைவர் சுரேஷ் கிருஷ்ணன்:

வழிகாட்டி மதிப்பு 33% குறைக் கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். இருந்தாலும் இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டுவதற்காக முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்ட ணத்தை 8%ல் இருந்து 11%ஆக அதிகரித்தது நாங்கள் எதிர்பார்க் காத ஒன்று. இதனால் வீடு வாங்கு வோருக்கு பெரிய பலன் இருக் கும் என்று சொல்ல முடியாது. இதனை அதிகரிக்காமல் இருந் திருந்தால் மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கும்.

கிரெடாய் தமிழ்நாடு முன்னாள் தலைவர் என்.நந்தகுமார்:

நிலத்தின் வழிகாட்டி மதிப்பைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது மக்களுக்கு பெரிதும் பலனளிக்கும். வீடுகள், குடியிருப்புகளின் விலை குறை யும். ரியல் எஸ்டேட் தொழிலும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தபோது ஒரு சதுர அடி ரூ.15 ஆயிரம் என இருந்தால், அப்போது முத்திரைக் கட்டணம் 7 சதவீதமாகவும், பதிவுக் கட்டணம் 1 சதவீதமாகவும் இருந்தது. அவ்வாறு இருந்த போது சதுர அடிக்கு ரூ.1200 செலுத்தி பதிவு செய்தனர். வழிகாட்டி மதிப்பு குறைத்த பின், அந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரமாக குறைகிறது. அதே நேரம் முத்திரை, பதிவுக் கட்டணம் 11% என கணக்கிட்டால் ரூ.1100 ஆக வரும். இதில் பெரிய வித்தியாசம் இல்லை. அதே நேரம் நிலத்தின் மதிப்பை எடுத்துக்கொண்டால் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தபோது ஆயிரம் சதுர அடி நிலம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்றது. மதிப்பு குறைந்த பின், ஒரு கோடி ரூபாய்க்கு விற்கும். நிலத்தின் விலை குறையும் போது கட்டப் படும் வீடுகளின் விலையும் பெரு மளவு குறையும். எனவே இத்திட் டத்தால் பலன்கள்தான் அதிகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE