தன்னலமறியா மனிதரின் சோக மரணம்

யாரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது, கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைப்பது போன்ற சமூக பொது பணிகளில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வந்தவர் எம். எஸ். சிவக்குமார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் புதன் கிழமையன்று உதவிக்குகூட யாருமில்லாத பரிதாப நிலையில் உயிரிழந்தார்.

56 வயதான எம். எஸ். சிவகுமார், சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகே செவ்வாய்கிழமையன்று பலத்த தலை காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். சிவக்குமாரை அடையாளம் கண்டுக்கொண்ட போலீஸார் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி, புதன் கிழமையன்று உயிரிழந்தார்.

2012-ஆம் ஆண்டு 'தானே' புயலில் சிக்கித் தவித்த ஆறு மாலுமிகளை மீட்க உதவியவர்களில் சிவகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம், எழும்பூரில் சுயநினைவில்லாமல் கிடந்த ஒருவரை மீட்டு, மருத்துமனையில் கொண்டு சேர்த்தார், சிவகுமார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிடவே, அவரது குடும்பத்தை கண்டுபிடித்து உடலை ஒப்படைத்திருக்கிறார். இது போன்று இவர் தொடர்ந்து பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வந்திருத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சேவையை பாராட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அரசு மருத்துவமனையில் விழா ஒன்றை நடத்தி இவரை கௌரவித்தனர்.

எப்போதும் வெள்ளை உடையில் காணப்படும் இந்த சமூக சேவகர், யாரும் பொறுப்பு ஏற்காத சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது தொடர்பாக தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வந்தவர்.

ஆனால், சிவகுமார் புதன்கிழமையன்று இறக்கும்போது அவருடன் உதவிக்குக்கூட யாருமில்லை. பின்னர், சிவகுமாரின் நண்பரான பி. டி. அலிக்கு மருத்துமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம், கேரளாவில் இருக்கும் சிவகுமாரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழில்: ஷோபனா

ஆங்கில வடிவில்: >Man who helped families in need dies alone in Chennai

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்