அவதூறு வழக்கு: ஜி.ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்றபோது, தலைமைக் காவலர் கனகராஜ் என்பவர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜூலை 22-ம் தேதி ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறி ஜி.ராமகிருஷ்ணனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிநாதன் முன்பு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ் ணன், “இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட ரீதியாக சந்திக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE