சமூக வலைதளங்களில் தனி நபர்களுக்கு எதிராக அவ தூறு பரப்புவோரை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் இணைய தள குற்றங்களைத் தடுக்கவும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்- ஆப் போன்ற அனைத்து சமூக வலைதளங்களுடனும் ஆதார் எண்ணை இணைப்பதை கட் டாயமாக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.
இந்த மனுவுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் ஆணையர் எம்.டி.கணேச மூர்த்தி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்தை யாரோ ஒருவர் பதிவு செய்தது தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
அந்தப்பதிவை பதிவு செய்த நபரின் விவரங்களைத் தர ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்து விட்டது. சைபர் குற்றங்களைப் பொருத்தவரை ஏராளமான புகார் கள் வருகிறது. கடந்த 2016-18 வரை 1,940 புகார்கள் தொடர் பான விவரங்களைக் கேட்டு சம்பந் தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பினோம். இதில் 484 புகார்களுக்கு மட்டும் சம்பந்தப் பட்ட கணி்னியின் ஐபி அடையாள எண்ணை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அதன் அடிப் படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சில வழக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவி்ல் செயல்படும் இந்த நிறுவனங்களிடம் இருந்து உரிய விவரங்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.
இருப்பினும் வேறு சில தனி யார் அமைப்புகள் மூலமாக இந்த விவரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல மத்திய அரசு சார்பில் இதுபோன்ற இணைய தள குற்றங்களைத் தடுக்க சேவை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக் கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் இதே அமர்வில் நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வெங்கடேசன், ‘இணைய தள குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும்போது புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை சமூக வலை தளங்கள் கட்டாயம் வழங்க வேண்டுமென கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிக ளில் உள்ளது. அவ்வாறு தேவை யான விவரங்களை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கவும், தேவைப் பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் அந்த விதிகளில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற் கென குறைதீர்ப்பாளரை அந்தந்த நிறுவனங்கள் தனியாக நிய மிக்க வேண்டும். ஆனால் அது போல யாரும் இதுவரை நியமிக்கப் பட்டதாக தெரியவில்லை’ என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், ட்விட்டர், யூ-டியூப் போன்ற நிறுவனங்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், இணையதள குற்றங்களைத் தடுக்க ஏதுவாக வழக்கு ஆவணங்களை புலன் விசாரணை அமைப்புகளுக்கு கொடுக்க மறுப்பது ஏன் என்றும் இதுவரை குறை தீர்ப்பாளர்களை ஏன் இன்னும் இந்தியாவில் நியமிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக சமூக வலைதள நிறுவனங்கள் 3 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.