முதல்வர் ஸ்டாலின் 
தமிழகம்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரின் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலைக்குப் புகழ்வணக்கம்.

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT