விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரனிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 
தமிழகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த14-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்றுடன் மனுத்தாக்கல் முடியவுள்ள நிலையில் நேற்று பகல் 12.05 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன்கால்வாய் உள்ளிட்ட விவசாயம்சார்ந்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். பனைத் தொழிலாளிகளின்நீண்டகால கோரிக்கைக்கு குரல் கொடுப்பேன்.கள்ளக்குறிச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் பெண்களின் தாலிகள் பறிக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசு டாஸ்மாக் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்து வருவது வேதனை அளிக்கிறது. இத்தேர்தலில் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என்று கூறியிருப்பது மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது” என்றார்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிர்வாகிகள் செகதீசபாண்டியன், அன்பு, தென்னரசு, நாதன், இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT