விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 
தமிழகம்

வாக்கு எண்ணிக்கை முகவர் கூட்டத்தில் ஓபிஎஸ் உடன் பாஜகவினர் கடும் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

விருதுநகர்: வாக்கு எண்ணிக்கை முகவர்கள்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவுடன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முகவர்களுக்கான அடையாள அட்டைகளை ஓ.பன்னீர்செல்வம் வழங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர் எழுந்து, தேர்தலின்போது சிறப்பாகப் பணிபுரிந்தும் தங்களுக்கு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி, பன்னீர்செல்வத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாஜகவினரை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தினர்.

SCROLL FOR NEXT