சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை பெய்ததால், சென்னையில் இருந்து துபாய்க்கும், அங்கிருந்து சென்னைக்கும் கடந்த4 நாட்களாக விமான சேவை ரத்துசெய்யப்பட்டது.
அதேபோல், குவைத், சார்ஜாவுக்கும் பெரும்பாலான விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டாலும், இயக்கப்பட்ட சில விமானங்களும் பல மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டது. இதனால், பயணிகள் கடும்அவதிக்குள்ளாகினர். துபாயில்மழை நின்றதால், அங்குள்ளவிமான நிலையங்களில் ஓடுபாதைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதன்படி, சென்னையில் இருந்து துபாய்க்கு நேற்று காலை புறப்பட்ட விமானத்தில் 267 பேர்பயணம் செய்தனர்.