தமிழகம்

கொலையான நிர்வாகி மனைவிக்கு சீட் தந்த சீமான்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெமினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஜனவரி 20-ம் தேதி மயிலோடு கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சேவியர் குமாரின் மனைவி ஆவார்.

எம்எஸ்சி, பிஎட், எம்பில் படித்துள்ள ஜெமினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

விளவங்கோடு தொகுதியில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் பெண்களாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளரே நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT