பாஜக 19, பாமக 10, தமாகா 3, அமமுக 2 - கூட்டணி கட்சி தொகுதிகளின் முழு பட்டியல்

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது. கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்:

வேலூர்- புதிய நீதி கட்சி (தாமரை சின்னம்), பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சி (தாமரை சின்னம்), சிவகங்கை - இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தாமரை சின்னம்), தென்காசி - தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை சின்னம்).

திருச்சி மற்றும் தேனி தொகுதியில் அமமுகவும், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. ராமநாதபுரத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவும் (ஓபிஎஸ் அணி) போட்டியிடுகின்றன.

காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன, என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 mins ago

வாழ்வியல்

3 mins ago

வாழ்வியல்

12 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

27 mins ago

சுற்றுச்சூழல்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்