இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் எதிரே நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் துணை செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்: முத்தரசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஒற்றுமையை சீர்குலைத்தல், இந்தியைத் திணித்து தமிழைப்புறக்கணித்தல் உள்ளிட்ட மக்கள்விரோத கொள்கைகளை மத்தியஅரசு செயல்படுத்தி வருவதாகவும், அதற்குக் கண்டனம் தெரிவித்தும், ‘பாஜக அரசே வெளியேறு’என்ற முழக்கங்களுடன் சென்னைகடற்கரை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, எரிவாயு சிலிண்டரைபாடையில் ஏற்றி மத்திய அரசுக்குஎதிராக முழக்கங்களை எழுப்பிபோராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியதாவது:

அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அரிசி விலை ரூ.60-ம், எண்ணெய் விலை 3 மடங்கும் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைரூ.410. தற்போது ரூ.1,240-க்கு விற்பனையாகிறது.

ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களில் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும்அவற்றை நிரப்ப மத்திய அரசு மறுக்கிறது. இவ்வாறு மக்கள் விரோத போக்குகளைக் கடைபிடித்து வரும்அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். இண்டியா கூட்டணி பாஜகஅரசை வெளியேற்றும் என்றார்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டமுத்தரசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT