தமிழகம்

முதல்வருக்கு எதிராக முகநூல் பதிவு - பாஜக நிர்வாகிக்கு வீட்டுக் காவல்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக முகநூலில் பதிவிட்ட பரமக்குடி நகர பாஜக தலைவரை போலீஸார் வீட்டு காவலில் வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாஜக நகர் தலைவராக இருப்பவர் முத்துலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக முகநூலில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து முத்துலிங்கத்தை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்தனர். அவர் வீட்டைவிட்டு வெளியில் செல்லாதவாறு வீட்டின் முன் போலீஸார் காவலில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT