சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அமைப்புரீதியாக மாவட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு, மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: விசிகவில் தாலுகா, சட்டப்பேரவைத் தொகுதி, ஒன்றியம், மாநகராட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைப்புரீதியான 144 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னையைப் பொறுத்தவரை கிழக்கு மாவட்டத்துக்கு சி.சவுந்தர், மேற்கு மாவட்டத்துக்கு நா.உஷாராணி, வடக்கு மாவட்டத்துக்கு சா.இளங்கோவன், தெற்கு மாவட்டத்துக்கு து.அப்புன், மத்திய சென்னையைப் பொறுத்தவரை கிழக்கு மாவட்டத்துக்கு பி.சாரநாத், மேற்கு மாவட்டத்துக்கு பா.வேலுமணி, வடக்கு மாவட்டத்துக்கு சேத்துப்பட்டு இளங்கோ, தென்சென்னையைப் பொறுத்தவரை மைய மாவட்டத்துக்கு சைதை ம.ஜேக்கப், வடக்கு மாவட்டத்துக்கு கரிகால்வளவன், தெற்கு மாவட்டத்துக்கு த.இளையாமற்றும் மேற்கு சென்னை மாவட்டத்துக்கு தேவ.ஞானமுதல்வன் ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசிகவில் அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் குறைந்தபட்சமாக பெண்கள் 14 பேர், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர் 15 பேர், இளைஞர்கள் 36 பேர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருவாய் மாவட்டங்கள் வீதம் 21 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு செயலாளர், 3 துணைச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை வடசென்னை மண்டலத்துக்கு கொளத்தூர் சுபாஷ், மத்திய சென்னை மண்டலத்துக்கு ரூதர் கார்த்திக், தென்சென்னை மண்டலத்துக்கு வேளச்சேரி ரவிசங்கர் ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.