சமூக சேவகரான `பாலம்' பா.கலியாணசுந்தரத்தின் சமூக சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடுநகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒன்றை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில்நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 
தமிழகம்

‘பாலம்’ கலியாணசுந்தரத்துக்கு குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்

செய்திப்பிரிவு

சமூக சேவகர் `பாலம்' பா.கலியாணசுந்தரத்துக்கு, திருமங்கலம் என்.வி.என்.நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் கல்லூரியில் நூலகராக பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியம், ஓய்வூதியம், குடும்ப சொத்து மற்றும் விருதுகள் மூலம் கிடைத்த அனைத்தையும் தொண்டு பணிக்கே வழங்கியதோடு, `பாலம்'என்ற அமைப்பைத் தொடங்கி நீண்டகாலமாக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பணியாற்றி வருகிறார்.

மத்திய அரசின் பத்ம விருது மற்றும் அமெரிக்காவின் `ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்' விருதுபெற்றுள்ளார். சமூக சேவகர் பாலம்பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என்.நகர் திட்டப் பகுதியில்குடியிருப்பு ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பயனாளி பங்குத் தொகையையும் அரசேஏற்றுக் கொண்டுள்ளது. குடியிருப்புஒதுக்கீட்டுக்கான ஆணையைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுபா.கலியாணசுந்தரத்திடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT