எல்லா தருணங்களிலும் தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை கோடம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

க்ரைம்

1 min ago

இந்தியா

6 mins ago

சினிமா

17 mins ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

29 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்