வணிக வீதி

வெற்றி மொழி: பாப்லோ பிக்காசோ

செய்திப்பிரிவு

1881-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டு வரை வாழ்ந்த பாப்லோ பிக்காசோ ஸ்பானிஷ் ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், கவிஞர், மண்பாண்ட கலைஞர், மேடை வடிவமைப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர். தனது பெரும்பாலான இளமை காலத்தை பிரான்சில் செலவழித்தார். கியூபிசம் என்னும் புது ஓவிய பாணியை உலகிற்குத் தந்தவர் இவரே. ஆயிரக்கணக்கான சிற்பங்கள், ஓவியங்கள், பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள் என பலவகையான கலைப்படைப்புகள் இவரது ஆக்கங்களில் அடங்கும். நவீன ஓவியங்களின் பிரம்மா என்று போற்றப்படும் பிக்காசோ, இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க கலைஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.

# நமது ஆத்மாவின் அன்றாட வாழ்வின் அழுக்குகளை சுத்தப்படுத்துவதே கலையின் நோக்கம்.

# அனைத்து குழந்தைகளும் கலைஞர்களே. பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வளர வளர எப்படி தொடர்ந்து கலைஞனாகவே இருப்பது என்பதே.

# இளமைப்பருவத்திற்கு வயது கிடையாது.

# யார் மனித முகத்தை சரியாகப் பார்க்கிறார்: புகைப்படக்காரர், கண்ணாடி அல்லது ஓவியர்?

# என்னால் செய்யமுடியாததையே நான் எப்போதும் செய்கிறேன், அதை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.

# திட்டம் எனும் வாகனத்தின் மூலமாக மட்டுமே நமது இலக்குகளை அடைய முடியும்.

# செயல்பாடே அனைத்து வெற்றிகளுக்குமான அடிப்படை திறவுகோல்.

# கலை என்பது உண்மையை நமக்கு உணரவைக்கும் பொய்யாகும்.

# நான் பொருட்களைப்பற்றி நினைப்பதைப்போலவே அவற்றை வரைகிறேன், பார்ப்பதைப்போல அல்ல.

#வாழ்க்கையில் மிக உயரிய புத்துணர்வு அன்பே.

# நான் என்ன நினைக்கிறேன் என்பதை எனது கை என்னிடம் சொல்கிறது.

# வாழ்க்கையின் அர்த்தம் உங்களுக்கான பரிசைக் கண்டறிவது, வாழ்க்கையின் நோக்கம் அதை கொடுத்துவிடுவது.

# கணினிகள் பயனற்றவை. அவைகளால் உங்களுக்கு பதில்களை மட்டுமே கொடுக்கமுடியும்.

# நான் தேடுவதில்லை. நான் கண்டறிகிறேன்.

SCROLL FOR NEXT