வெற்றி மொழி: அர்னால்டு ஸ்வாஸ்னேகர்

1947ஆம் ஆண்டு பிறந்த அர்னால்டு ஸ்வாஸ்னேகர் ஒரு ஆஸ்திரிய அமெரிக்கர் ஆவார். நடிகர், தயாரிப்பாளர், விளம்பர மாடல், தொழிலதிபர், முதலீட்டாளர், ஆசிரியர், கொடையாளர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் மற்றும் தொழில்முறை உடற்கட்டு கலைஞர் போன்ற பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் பெரும் புகழ் பெற்றார். மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் முப்பத்து எட்டாவது கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். சிறுவயது முதலே உடற்கட்டு கலை பயிற்சியில் அதீத ஆர்வமுடையவராக இருந்தார். உலகளவில் பல பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும், உடற்கட்டு கலை பற்றிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

# வெற்றியிலிருந்து பலம் கிடைப்பதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களுக்கான பலத்தை உருவாக்குகின்றன.

# உங்கள் கைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே, வெற்றி எனும் ஏணியில் உங்களால் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

# துன்பங்களின் வழியே பயணப்படும்போதும், விடாமுயற்சியுடன் இருப்பதே வலிமை.

# நினைவில் வைப்பதற்கு கடினமானதாக இருந்தால், அது மறப்பதற்கும் கடினமானதாக இருக்கும்.

# பொதுமக்கள் பாதுகாப்பே அரசின் முதல் கடமை மற்றும் உயர்ந்த பொறுப்பாக உள்ளது.

# ஒருபோதும் கூட்டத்தை பின்பற்றாதீர்கள், எங்கு காலியாக இருக்கின்றதோ அங்கு செல்லுங்கள்.

# நமது எதிர்காலமானது, நமது குழந்தைகளின் இன்றைய கல்வி தரத்தைப் பொறுத்தது.

# நீங்கள் உங்களை நம்பவில்லை என்றால், பிறகு வேறு யாரோ உங்களை எப்படி நம்புவார்கள்?

# மனமே அனைத்திற்குமான எல்லை.

# தோல்வியடைய பயப்பட வேண்டாம்.

# பணம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவாது.

கனவுகள் கனவு காண்பவர்களுக்காக, இலக்குகள் சாதனையாளர்களுக்காக.

# கடும் உழைப்பே நல்ல அதிர்ஷ்டத்தின் தாய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE