வணிக வீதி

சந்தை வீழ்ச்சியின்போது பெருங்குழும நிறுவன முதலீடு பலன் தரும்

செய்திப்பிரிவு

பொதுவாக வணிகத்துக்கும், வாழ்க்கைக்கும் பல்துறைக்கான ஈடுபாடு என்பது வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகப் படுத்தும். இதற்கு உதாரணமாக உடற் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி, உடல் வலிமை பயிற்சி உடன் நெகிழ்வுத் தன்மை பயிற்சியை இணைத்து செய்வது அபாயத்தை குறைக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பல பயிர்களை பயிரிட்டு வளர்க்கும் விவசாயி மோசமான வானிலை அல்லது பூச்சி தாக்குதல் காரணமாக ஒரு பயிர் சேதமடைந்தாலும் குறைவாகவே பாதிப்படைகிறார். இதேபோல்தான், வணிக உலகில், பல துறைகளில் செயல்பாடுகளைக் கொண்ட பெருங்குழும நிறுவனங்கள் சவாலான வணிக சூழல்களை சிறப்பாக தாங்கும் திறன் கொண்டவை.

ஏனெனில், அந்த குழுமத்தின் வருவாய் ஓட்டமானது பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு துறையில் ஏற்படும் சரிவு கூட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தையும் அவ்வளவு கடுமையாக பாதிக்காது. இந்த பல்வகைப்படுத்தல் பாதிக்கப்பட்ட வணிகத்தை மீண்டெழுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. ஏனெனில், இதற்கு கூட்டு நிறுவனத்தின் பரந்த வளங்கள் ஆதரவாக அமையும்.

2014-19-ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட நெருக்கடியை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். புதிய போட்டியாளர்கள் மலிவு விலையில் சேவைகளை வழங்க தொடங்கியதால் பல சிறிய நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து தங்களது வணிகத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அல்லது மற்றொரு பெரிய நிறுவனத்துடன் இணைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.

ஆனால், ஒரு பெருங் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள் தப்பிப் பிழைத்தன. இதேபோல்தான் 2014 மற்றும் 2022-க்கு இடையில் ரியல் எஸ்டேட் சந்தையில் சரிவு ஏற்பட்டு பல வங்கி சாரா நிதி நிறுவனங்கள் திவாலாக வழிவகுத்தன. அதேநேரத்தில், பெருங் குழுமங்களின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றன.

எனவே, சரிவுகள் ஏற்படும் சூழ்நிலையின்போது இந்த மீள்தன்மை பெருங்குழும நிறுவனங்களின் வணிகங்களை நல்ல முதலீடுகளாக மாற்றும். முதலீட்டாளர்கள் இந்த கருப்பொருளில் முதலீடு செய்வதற்கு மியூச்சவல் பண்ட் திட்டங்கள் பேருதவியாக உள்ளன. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. வணிக சுழற்சியின்போது வெவ்வெறு புள்ளிகளில் எவை நல்ல முதலீடுகள் என்பதை மதிப்பிடுவது முதலீட்டாளர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம்.

இதற்காகத்தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. வலிமை, நிர்வாகம், கலவையான துறை, வளர்ச்சி வாய்ப்புகள், வணிக ஒருங்கிணைப்பு, முந்தைய சரிவுகளின் போது செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த முதலீடுகளை தேர்வு செய்ய முதலீட்டாளர்களுக்கு பரஸ்ரப நிதி நிறுவனங்கள் உதவுகின்றன.

அதேபோன்ற பின்னணியில் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாக ஐசிஐசிஐ புருடென்ஷியல் கார்ப்பரேட் பண்ட் உள்ளது. இது முன்னணி கூட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு திறந்தநிலை பங்குத்திட்டமாகும். மேலும், இது சந்தை மூலதனத்தை பல்வேறு துறைகளுக்கு மாற்றுவதற்கான நெகிழ்வுத் தன்மையை கொண்ட திட்டமாக உள்ளது. ஐசிஐசிஐ புருடென்ஷியலின் இந்த என்எப்ஓ திட்டம் அக்டோபர் 17 வரை முதலீட்டுக்காக திறந்திருக்கும்.

- பிரவீன் குமார், நிறுவனர் - பியூச்சர் சேவிங்ஸ்

கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/ பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.

SCROLL FOR NEXT