நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதா அல்லது பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதா, இதற்கெல்லாம் ஆலோசகரின் உதவி தேவையா? என முதலீட்டாளர்களுக்க பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும். இதுபற்றி பார்க்கலாம். உங்கள் முதலீட்டு முடிவுகளுக்காக சிறந்த தீர்மானம் எடுக்க சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், சில முன்னணி நிறுவனங்கள் சுமார் 0% வருவாயை மட்டுமே வழங்கியுள்ளன. சில நிறுவனங்கள் குறைவான வருவாயையும் சில நிறுவனங்கள் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. 3 ஆண்டுகளில் 10% வருவாய் என்பது ஆண்டுக்கு சராசரியாக (சிஏஜிஆர்) சுமார் 3.23% என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பங்கு விலை உயர்ந்த நிறுவனங்கள் (வருவாய்%)
1. நிறுவனம் 1 = 8.4%
2. நிறுவனம் 2 = 11.5%
3. நிறுவனம் 3 = 8.12%
4. நிறுவனம் 4 = 8%
நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள் (நஷ்டம் %)
1. நிறுவனம் 1 - 77%
2. நிறுவனம் 2 - 70%
3. நிறுவனம் 3 - 49%
4. நிறுவனம் 4 - 43%
எனவே, முதலீட்டுக்காக பங்குகளை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு அளவுகோல்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
பரஸ்பர நிதி திட்டங்களின் நிலை என்ன? - பல்வகைபடுத்தப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்கள் (Diversified Mutual Funds) பல்வேறு வகையான நிறுவன பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதிலும் சில திட்டங்கள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தையும் சில திட்டங்கள் நஷ்டத்தையும் வழங்கி உள்ளன.
2025 ஜூன் 30 நிலவரப்படி ஓராண்டில் லாபம் சம்பாதித்த 4 திட்டங்கள்
1. திட்டம் 1: 22.1%
2. திட்டம் 2: 21.4%
3. திட்டம் 3: 19.2%
4. திட்டம் 4: 18.5%
நஷ்டம் கொடுத்த 4 திட்டங்கள்
1. திட்டம் 1: -15.09%
2. திட்டம் 2: -13.56%
3. திட்டம் 3: -11.02%
4. திட்டம் 4: -9.43%
முதலிடத்திலும் கடைசி இடத்திலும் உள்ள பரஸ்பர நிதி திட்டங்கள் இடையிலான வருடாந்திர வருவாய் வித்தியாசம் சுமார் 35% ஆக உள்ளது. இதனால் உகந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் என்பதும், பரஸ்பர நிதி திட்டங்களிலும் ஆராய்ச்சி மற்றும் தொடர் பகுப்பாய்வு தேவை என்பதும் நிரூபணமாகிறது. கடந்த காலத்தில் நஷ்டத்தை சந்தித்த திட்டங்கள், எதிர்காலத்தில் சிறந்ததாக மாற வாய்ப்பு உண்டு (அதனால் திட்டங்களின் பெயர்கள் கூறப்படவில்லை).
ஒரு திட்டத்தின் உண்மையான திறனை முடிவு செய்ய நீண்டகால அடிப்படையில் அதன் வருவாய் எப்படி உள்ளது என்பதை பார்ப்பதுதான் சிறந்தவழி. எனவே, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு AMFI / SEBI / NISM சான்றளிக்கப்பட்ட ஒரு திறமையுள்ள ஆலோசகர் அவசியம். முடிவாக, நேரடியாக பங்குகளிலோ, பரஸ்பர நிதி திட்டங்களிலோ முதலீடு செய்யும்போது ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவதுதான் சரியானதாக இருக்கும்.
- sunilsubramaniam27@gmail.com