கிரிக்கெட் உலகில், வீரர்கள் பார்மில் இருக்கிறார்கள் அல்லது பார்மில் இல்லை என்று அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறோம். பார்மில் இருக்கும் விளையாட்டு வீரரின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும். இதனால், 11 பேர் அடங்கிய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும். சிறப்பாக செயல்பட முடியாமல் பார்மில் இல்லாத வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பும் வரை அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும்.
மொமென்ட்டம் (உந்தம்) முதலீட்டு உத்தியும் இதே தத்துவத்தைத்தான் பின்பற்றுகிறது. இது, சிறப்பாக செயல்படும் அல்லது பார்மில் உள்ள பங்குகளை தேர்ந்தெடுத்தும், பின்தங்கிய பார்மில் இல்லாத பங்குகளை குறைக்கவும் செய்கிறது.
வெற்றியாளர்களை ஆதரித்தும், செயல்திறன் குறைவாக உள்ளவர்களை விட்டுவிடுவதும் போன்ற இந்த உத்தி, சந்தை வேகத்தை சாதகமாக பயன்படுத்தி அதிலிருந்து நமது போர்ட்ஃபோலியோ பயனடைய உதவுகிறது.
முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் விலை மற்றும் வருவாய் வேகத்தை அனுபவிக்க முடியும். ஆனால், விலை வேகம் என்பது வெவ்வேறு காலகட்டங்களில் சாதகமான போக்கு மற்றும் ஆபத்து-சரி செய்யப்பட்ட வருமானத்தை அடிப்படையாக் கொண்டது. விலை வேகம் கொண்ட பங்குகள் வலுவான வருவாய் வளர்ச்சி வேகத்தை வழங்குகின்றன.
அத்துடன் நீண்ட கால வருவாய்க்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இது ஒரு சார்பான மதிப்பீடுகளை முறியடிக்கின்றன. கட்டமைப்பு அல்லது சுழற்சியை தூண்டுதல் ஒரு நிறுவனத்தின் நடுத்தர வருவாய் முதல் நீண்ட கால வருவாய் பாதை வரை வடிவமைக்கக்கூடும்.
இதுபோன்ற சந்தை மொமென்ட்டுக்கான சமீபத்திய உதாரணம் 2023-24-ம் நிதியாண்டில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவில் காணப்பட்டது. இதற்கு மத்திய அரசு, சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் மூலதனச் செலவினங்களை அதிகரித்ததே முக்கிய காரணம்.
இதனால் இத்துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனப் பங்குகள் நேரடியாக பயனடைந்தன. இதுதவிர, மேக் இன் இந்தியா திட்டமும் பொதுத் துறை பங்குகளின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்க உதவின. இதனால், பொதுத் துறை பங்குகள் முதலீட்டாளர்களை அதிக அளவில் கவர்ந்தன.
முன்னதாக, இந்த பங்குகள் பல ஆண்டுகளாக சாதகம் இல்லாத நிலையில் இருந்ததையடுத்து குறைந்த விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் பொதுதுறை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்குவதற்கு வழிவகுத்தது. 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் அரசின் கொள்கைகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததையடுத்து பொதுத் துறை பங்குகளின் விலை அதிகரிப்புக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.
தீவிரமாக நிர்வகிக்கப்படும் மொமென்ட்டம் உத்திகள் சந்தையில் இத்தகைய விலை மற்றும் வருவாய் போக்குகளின் தொடர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வதையும் அதற்கேற்ப தங்கள் போர்ட்ஃபோலியோக்களை உருவாக்குவதையும் பிரதானமாகக் கொண்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெற ஒரு கிரிக்கெட் அணி பார்மில் உள்ள அதன் வீரர்களை நம்பியிருப்பதைப் போல, ஒரு முதலீட்டு போர்ட்ஃபோலியோ சந்தை மொமென்ட்டம் உடன் இணைந்திருப்பதன் மூலம் பயனடையலாம்.
இருப்பினும், புனையப்பட்ட செய்திகளால் இயக்கப்படும் நிறுவனங்களின் பங்குகள் என்பதை அடையாளம் காண்பதில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில்தான் ஆழமான தொழில்நுட்ப மற்றும் அடிப்படை பகுப்பாய்வு தேவைப்படுகிறது.
இதுபோன்ற சமயங்களில்தான், தொழில் வல்லுநர்களால் நிர்வகிக்கப்படும் மொமென்ட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர நிதிகள் ஒரு வசதியான, நல்ல தீர்வாக அமைகின்றன. வருவாய் அல்லது விலை உந்தத்தின் அடிப்படையில் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டமான ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆக்டிவ் மொமென்ட்டம் பண்டில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம். இதற்கான என்எப்ஓ திட்டம் ஜூலை 22 வரை அமலில் இருக்கும். கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.
- ஜி.மாரிமுத்து; நிர்வாக இயக்குநர், எம்எம் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ்