மொமென்ட்டம் ('உந்தம்) என்ற சொல் நகரும் பொருள் அல்லது நடைபெறும் நிகழ்வு பெறும் உந்துதலைக் குறிக்கிறது. அதேபோன்று, முதலீடு செய்வதில், உந்தம் என்பது நிதிச் சந்தைகளில் விலை போக்கு அல்லது வருவாய் போக்குகளின் தொடர்ச்சியை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு உத்தியை குறிக்கிறது. இது பங்குச் சந்தைகளில் சமீபத்திய வெற்றியாளர்கள் தொடர்ந்து வெற்றியாளர்களாகவே இருப்பார்கள் என்ற சிந்தனை செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது.
உந்த முதலீட்டில் கவனம் செலுத்தும் ஒரு போர்ட்போலியோ என்பது, வலுவான சமீபத்திய செயல்திறனை காட்டும் பத்திரங்கள், எதிர்மறை போக்குகளால் வெளியேறிய பத்திரங்கள் என இரண்டையுமே வைத்திருக்கும்.
உந்த முதலீட்டை தேர்வு செய்ய 3 முக்கிய காரணங்கள்:
1 இன்றைய டிஜிட்டல் மற்றும் உலகமயமாக்கப்பட்ட நிதிச் சூழல் அமைப்பில் உந்த முதலீடு பொருத்தமானது. ஏனெனில் செய்திகள் மற்றும் தகவல்கள் வெகுதூரம் பயணித்து முதலீட்டாளர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் வடிவமைக்கின்றன. சந்தையின் போக்கு குறித்த தெளிவுநிலை பெறும் போது அதிகமான முதலீட்டாளர்கள் அதில் குவிகிறார்கள்.
மாற்றத்தின் பொதுவான திசை வலிமை பெறும்போதும் நீண்ட காலம் நீடிக்கும்போதும் முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. உதாரணமாக, கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய மருந்துத் துறை வருவாய் அதிகரிக்கும் போக்கைக் கூறலாம்.
2 முதலீட்டாளர்கள் ஆதாயங்களை இழக்க நேரிடும் என்று அஞ்சுவதால், வெற்றிபெறும் முதலீடுகளை மிக விரைவாக விற்கும் போக்கைக் கொண்டுள்ளனர். அதே போன்று, இழப்புகளைத் தவிர்க்க நீண்ட காலத்திற்கு முதலீடுகளை தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்த மனித இயல்பு நீண்டகால முதலீட்டு வருமானத்துக்கு தடையாக அமைகின்றன. இந்நிலையில், உந்த உத்திகள் மூலம் முதலீட்டாளர்களின் வாங்குதல் மற்றும் விற்பனை முடிவுகளில் இருந்து உணர்ச்சி, சார்புகளை அகற்றலாம். மாற்றாக அடிப்படை பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி திறம்பட முதலீடு செய்யலாம்.
3 உந்த முதலீடு சந்தையின் போக்கை கண்டறிந்து பங்கின் வளர்ச்சி, மதிப்பு, தரம் அல்லது வேறு எந்த காரணியையும் பொருட்படுத்தாமல் சிறப்பான செயல்பாட்டை கொண்டதை வாங்கவும், மந்தமான செயல்பாடுடையதை விற்கவும் செய்கிறது. எடுத்துக்காட்டாக, 2020-ல், உந்த உத்திகள் வளர்ச்சி சார்ந்த தொழில்நுட்ப பங்குகளை நோக்கிச் சாய்ந்திருக்கும்.
அதேநேரம், 2023-ல் பொதுத்துறை பங்குகளை வைத்திருப்பதற்கு முன்னுரிமை அளித்திருக்கும். முதலீட்டு பாணிகளில் தடையின்றி மற்றும் யுக்தியுடன் மாறுவதற்கு இது வழிவகுக்கிறது. இருப்பினும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு உந்த பங்குகளைப் புரிந்துகொள்வது என்பது சவாலானது.
இதற்கு, பெரும்பாலும் சிக்கலான தொழில்நுட்ப மற்றும் அடிப்படை பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகளில், தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் உந்தத்தை மையமாகக் கொண்ட பரஸ்பர நிதிகள் ஒரு வசதி யான மாற்றை வழங்குகின்றன.
அந்த வகையில்,வருவாய் அல்லது விலை உந்தத்தின் அடிப்படையில் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் திறந்தநிலை நிதியான ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆக்டிவ் உந்த நிதி திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம். ஜூலை 08-ல் தொடங்கியுள்ள இந்த புதிய நிதி திட்டம் (என்எப்ஓ) ஜூலை 22 வரை அமலில் இருக்கும்.
- கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.
டி.எஸ். சேதுராமன் நிர்வாக இயக்குநர், சுரபி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் பி. லிட்