சராசரி முதலீட்டாளர் ஒருவர் பங்குச் சந்தையில் சரியான கருப்பொருளை (Theme) அடையாளம் காண கணிசமான அளவு நேரத்தையும், சக்தியையும் செலவிட வேண்டியிருக்கும். அவ்வாறு ஒன்றை அடையாளம் கண்டு அங்கீகரித்த பிறகு அதை எவ்வாறு மூலதனமாக்குவது என்பதை கண்டறிவது அவசியம். அதையடுத்து, ஏற்கெனவே சுழற்சியின் உச்சத்தில் மதிப்பீடுகள் இருக்கும்போது முதலீடு செய்ய இது சரியான தருணமா அல்லது மிகவும் தாமதமான உள்நுழைவா என்பதை முதலீட்டாளர்கள் முன்பாக அடுத்தடுத்த கேள்விகள் வரிசை கட்டி நிற்கும்.
போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான சிக்கலான மற்றும் பெரும்பாலும் சோர்வூட்டக்கூடிய செயல்முறையை கருத்தில் கொள்ளும்போது கருப்பொருள் நிதிகள் மூலம் அதாவது தீமேட்டிக் பண்ட்ஸ் மூலம் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். இது, சந்தை மதிப்பீடுகளை விஞ்சக்கூடிய வகையிலான பங்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு போர்ட்போலியோவாக இருக்கும்.
தொழில்முறை சொத்து மேலாண்மை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் இந்த நிதிகள் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்பின் நன்மைகளை சரியாக பயன்படுத்திக்கொள்கின்றன. சாதகமாக கட்டமைக்கப்பட்ட இந்த நிதி தொகுப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஆபத்து-வெகுமதியை சமநிலையில் பராமரிக்க முடியும். அதேவேளையில் அதிக வருமானத்தை உருவாக்குவதும் இலக்காக அமையும்.
ஆச்சர்யமூட்டும் வகையில் பரஸ்பர நிதிகளில் தீமேட்டிக் பண்ட் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது. இதில், மொத்தம் ரூ.4.7 லட்சம் கோடி சொத்துகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 2025 இறுதி நிலவரப்படி பங்குகள் சார்ந்து நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த நிதிநிர்வாகத்தில் இதன் பங்கு 15.83 சதவீதம் என்று இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பின் (ஏஎம்எப்ஐ) தரவுகள் தெரிவிக்கின்றன. துறை சார்ந்து உள்ள மேக்ரோதொடர்புகள் குறித்து சரியான நேரத்தில் அறிந்து ஆழமான அறிவை பெறுவது தனிப்பட்ட முதலீட்டாளர்களின் முன்பு உள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. நேரம் இல்லாமை மற்றும் குறைவான ஆராய்ச்சி வளங்கள் காரணமாக சந்தை சுழற்சிகளின் தகவல்களை அறிந்து பந்தயம் கட்டுவது கடினம். சந்தை சுழற்சியின் கட்டத்தைப் பொறுத்து துறை மற்றும் தீமேட்டிக் செயல்திறன் பரவலாக மாறுபடும். வெற்றியாளர்களுக்கான வாய்ப்பு வேகமாக மாறி மாறி வருவதால் சரியான துறையை தொடர்ந்து தேர்ந்தெடுப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று.
மேலும், சுழற்சியின் தவறான பக்கத்தில் சிக்கிக் கொள்வது என்பது வருமானத்தை மட்டுமல்ல முதலீடு செய்யப்பட்ட ஒட்டுமொத்த மூலதனத்தையும் கணிசமாக பாதிக்கும். இதனை தவிர்க்க, அர்ப்பணிப்புள்ள நிதி மேலாளர்களின் நிபுணத்துவத்திலிருந்து பெரும் பயனடையும் தீமேட்டிக் பண்டுகளை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம். மேக்ரோ பொருளாதார போக்குகளை முறையாக மதிப்பிடுவதன் மூலம் வளர்ச்சிக்கான கருப்பொருள்களை நாம் அடையாளம் காண முடியும். அதற்கேற்ப அளவில் முதலீடுகளை நாம் ஒதுக்க முடியும். தீமேட்டிக் பண்ட் ஆப் பண்ட்ஸ் (எப்ஓஎப்) திட்டங்களுக்கு சாதகமான வரிச் சலுகைகளையும் நாம் பெற முடியும். 24 மாதங்களுக்கு மேலாக வைத்திருக்கும் பண்டுகளுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக வெறும் 12.5 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இது வரிக்கு பிந்தைய வருமானத்தை அதிகரிக்கிறது.
வளர்ச்சி வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் ஐசிஐசிஐ புருடென்ஷியல் தீமேட்டிக் அட்வான்டேஜ் பண்டை (எப்ஓஎப்) பரிசீலிக்கலாம். இந்த பண்ட் ஆப் பண்ட்ஸ் திட்டம் பல்வேறு துறைசார் மற்றும் கருப்பொருள் நிதிகளில் முதலீடு செய்கிறது. - பி.மாரிமுத்து, நிர்வாக இயக்குநர், எம்எஸ் பண்ட்ஸ்மார்ட்
கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.