வணிக வீதி

வளர்ச்சிக்கு ஏற்ற தரமான திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்

Guest Author

நாம் ஒரு தொலைபேசி அல்லது காரை வாங்க முடிவு செய்து விட்டோம். எதற்கு முன்னுரிமை அளிப்போம். உயர் தரத்துக்கு தானே. ஏனெனில், தினமும் அல்லது விசேஷ நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் கடினமான அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அந்த பொருளின் பயன்பாடு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் உயர் தரத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

உதாரணமாக, ஒரு செல்போனை வாங்கும் போது, அதிக நேரம் பயன்படுத்தினால் அது சூடேறாமல் இருக்க வேண்டும். அல்லது ஒரு கார் வாங்கும்போது, செங்குத்தான மலைகளில் நீண்ட தூரம் ஓட்டும்போது அந்தக் காரின் இயந்திரம் சூடாகாமல் இருக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம்.

இதுபோன்று, உயர்தரமான திட்டங்களில் முதலீடு செய்யும்போது அவை சிறப்பான சந்தை சூழ்நிலையில் நிலையான வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல் சந்தை அழுத்தம் அதிகமாக உள்ள காலங்களிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

மார்ச் 2025 நிலவரப்படி 5 ஆண்டு தினசரி ரோலிங்ரிட்டர்ன் அடிப்படையில், நிப்டி 200 குவாலிட்டி 30 மொத்த வருவாய் குறியீடு, நிப்டி 200 மொத்த வருவாய் குறியீட்டுடன் ஒப்பிடும்போது அதிக சராசரி வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி உள்ளது. 2010-2011, 2015-2016, 2019-2020 மற்றும் 2021-2022-ம் ஆண்டுகளில் சந்தையில் கரடி ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டபோதும், நிப்டி 200 குவாலிட்டி 30 மொத்த வருவாய் குறியீட்டின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இது பாதகமான காலகட்டங்களை சிறப்பாக கையாண்டு அதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தி சிறப்பான வருவாயை அளித்திருக்கிறது.

அது சரி, ஒப்பீட்டளவில் குறைந்த ஏற்ற இறக்கம், அதிக வருவாய் மற்றும் இடர் சரிசெய்யப்பட்ட வருமானம் கொண்ட தரமான வணிகங்களை அடையாளம் காண்பது எப்படி?. பொதுவாக, தயாரிப்பு, சேவை, விநியோகம், அல்லது பிராண்ட் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் வணிகங்களை தரமான வணிகங்களாக வகைப்படுத்தலாம். அதேபோன்று, முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில், அதிக வருவாய், குறைந்த கடன், அதிக ரொக்க கையிருப்பு மற்றும் நல்ல மூலதன ஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்ட வணிகங்களையும் உயர் தரமானவை பிரிவில் சேர்க்கலாம்.

இதற்கு உதாரணமாக, இந்தியாவில் புதுமையான தயாரிப்புகள், வலுவான விநியோக கட்டமைப்பைக் கொண்ட பிரபலமான பெயிண்ட் நிறுவனத்தைக் கூறலாம். அதேபோன்று, காலம் தவறாமை, செலவு-செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு முன்னணி விமான நிறுவனத்தையும் தரமான வணிகத்துக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

உயர்தர வணிகங்கள் வழங்கும் நிலைத்தன்மை, நீடித்த உழைப்பு மற்றும் மீள்தன்மை ஆகியவற்றிலிருந்து பயனடைய ஒரு தரமான திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம். அதற்கு, ஒருவர் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது குறித்து தாராளமாக பரிசீலிக்கலாம்.

அதற்கான ஒரு புதிய திட்டமாக ஐசிஐசிஐ புருடென்ஷியல் குவாலிட்டி பண்ட் அறிமுகமாகியுள்ளது. இது தர காரணியை மையமாகக் கொண்ட ஒரு திறந்தநிலை திட்டமாகும். இது முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் குறிக்கோளுடன், நியாயமான மதிப்பீடுகளில் கிடைக்கும். இந்த குவாலிட்டி பண்ட், உயர்தர பங்குகள் மூலம் தங்கள் போர்ட்போலியோக்களை மேம்படுத்த முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய திட்ட வெளியீடு (என்எப்ஓ) மே 6, 2025 முதல் மே 20, 2025 வரை அமலில் இருக்கும்.

கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.

- ஜி.வினோத் குமார், நிர்வாக இயக்குநர், ஆதி பின்சர்வ்

SCROLL FOR NEXT