நாம் ஒரு டிவி வாங்கினாலும் சரி, ஆடை வாங்கினாலும் சரி நுகர்வோராக தரம் மற்றும் விலை ஆகியவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். இந்த பகுத்தறியும் அணுகுமுறை நமக்கு எல்லாவற்றிலும் சிறந்த பலனை தருகிறது. பின்னர் ஏன் அதனை நாம் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.
உயர்தர வணிகங்களில் முதலீடு செய்வது நீண்டகால அடிப்படையில் நமக்கு எப்போதும் நல்ல முடிவுகளையே தரும். இதனை பல்வேறு தரவுகள் நிரூபிக்கின்றன. நிப்டி 200 குவாலிட்டி 30 இன்டெக்ஸ் பண்டை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.
தரமான முதலீடு என்பது நீடித்த வளர்ச்சியைக் கொண்ட வணிகங்களில் முதலீடு செய்வதை குறிக்கிறது. வலுவான பிராண்ட் பிம்பம், பெரிய வாடிக்கையாளர் தளம், குறைந்த செலவு, சிறப்பான தயாரிப்பு, வலுவான விநியோக வலையமைப்பு போன்றவற்றின் பின்னணியில் இந்த வணிக நிறுவனங்கள் நீண்டகால சராசரியை விடஅதிகமாக வளர்கின்றன.
அவை வலுவான வருவாய் மற்றும் நிலையான இருப்புநிலை குறிப்புகளின் ஸ்திரமான பதிவுகளை கொண்டுள்ளன. இதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளை சரியான விலையில் முதலீட்டாளர்கள் வாங்கும்போது மிகுந்த பலன்களை அளிக்கும்.
கரோனா தொற்றுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் பெரும் மீட்சியை சந்தித்தது. இதனால், பங்குச் சந்தைகளில் ஒரு பரவலான ஏற்றத்தைக் கண்டோம். ஆனால், தற்போது புவிசார் அரசியல் பதற்றம், இந்தியா-பாகிஸ்தான் மோதல், மிதமான உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வேகம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் மேல் நோக்கிய வளர்ச்சியில் கீழ்நோக்கிய அழுத்தம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், உயர்தர வணிகங்கள் சந்தை சரிவுகளை எதிர்கொள்ளும்போது மிகவும் மீள் தன்மையுடன் உள்ளன. இதில் தரம் என்ற கருப்பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில் சந்தை சிறப்பாக செயல்படாத காரணத்தால் இதுபோன்ற திட்டங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. தற்போது இவை கவர்ச்சிகரமான மதிப்பீடுகளில் கிடைக்கின்றன.
பொருளாதார முட்டுக்கட்டை மற்றும் நியாயமான மதிப்பீடுகளின் இந்த கலவையானது தரத்தை ஒரு கருப்பொருளாக கொண்டு முதலீடு செய்வதற்கு ஒரு சரியான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. அந்த சந்தர்ப்பத்தை ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்டின் சமீபத்திய அறிமுகமான ஐசிஐசிஐ புருடென்ஷியல் குவாலிட்டி பண்ட் தற்போது வழங்கியுள்ளது.
கடந்த மே 6-ம் தேதி தொடங்கிய இந்த திட்டத்தின் என் எப்ஓ வரும் மே 20 வரை அமலில் இருக்கும். இது ஒரு ஓபன்-என்டட் திட்டமாகும். இந்த திட்டம், அதிக ஈக்விட்டி வருமானம் (ROE), முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மீதான வருமானம் (ROIC), நல்ல பணப்புழக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் அடிப்படையில் வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் நீண்டகால வளர்ச்சியை தக்கவைக்க முற்படுகிறது. அதேநேரத்தில் நியாயமான மதிப்பீடுகளையும் உறுதி செய்கிறது.
- லக்ஷ்மணன் அசோக், நிறுவனர், ராம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்