நிச்சயமற்ற தன்மை மட்டுமே நிச்சயமானது என்ற பழமொழிக்கு பங்குச் சந்தையில் எப்போதுமே தனி மவுசு உண்டு. 2020 கரோனா பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் சந்தையை நான்கு ஆண்டுகளில் எட்டுவதற்கு ஸ்மால்-கேப் பங்குகளின் செயல்பாடு மிக முக்கியமானது.
அப்போது காணப்பட்ட எழுச்சி பல அனுபவமற்ற முதலீட்டாளர்களை பங்குச் சந்தையின் பக்கம் ஈர்க்க உதவியது. அந்த எழுச்சியின் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்டினர். இது, புறக்கணிக்கப்பட்ட பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களின் விருப்பமாக மாற்றியது. இந்த சூழ்நிலையில்தான் 2024 செப்டம்பர் பிற்பகுதியில் சந்தை பெரிய சரிவைசந்தித்து, முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 1.3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது. ஸ்மால்-கேப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை சரிந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2025 தொடக்கம் முதல் 65 நாட்களில் 15.85 பில்லியன் டாலரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றனர். 2022-ல் 17 பில்லியன் டாலரை திரும்பப் பெற்றதே மிகப் பெரிய வீழ்ச்சியாக கருதப்பட்டு வந்த நிலையில், 2025-ல் முதல் 65 நாட்கள் அதனை முறியடித்தது. பங்கு முதலீட்டின் நீண்டகால செயல்திறன் நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அதை உறுதியாக நம்ப முடியாது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.
கரோனா பெருந்தொற்று, வர்த்தகப் போர், நாணய மதிப்பிழப்பு போன்ற பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளால் பங்குச் சந்தையில் பாதிப்பு அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த மேக்ரோ எகனாமிக் தாக்கம் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளால் நீங்கள் தூக்கம் இழப்பதை தவிர்க்க விரும்பினால், பங்குகள், கடன்பத்திரம், தங்கம் ஆகியவற்றின் முதலீட்டு கலவை உங்களுக்கு அடிப்படையான தேவையாகும். ஒரு போர்ட்போலியோவை உருவாக்குவதில் சொத்து ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், நிலையற்ற தன்மையை குறைத்து நியாயமான நீண்டகால வருவாயை உருவாக்க முடியும்.
நிலையான நீண்டகால வருமானம் என்பது பாதுகாப்பு தேர்வைவிட சொத்து ஒதுக்கீட்டை அதிகம் சார்ந்தது என ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த சொத்து ஒதுக்கீடு முதலீட்டாளரின் நிதி பாதுகாப்புக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இந்த அணுகுமுறை சந்தையில் ஏற்றம் இறக்கம் ஏற்படும்போது போர்ட்போலியோவில் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதுடன் முதலீட்டாளர்களுக்கான இழப்பை சமன் செய்கிறது.
இந்த உத்திக்கு ஏற்ப, பயனுள்ள சொத்து ஒதுக்கீட்டை தேடும் முதலீட்டாளர்களுக்கு ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அசெட் அலொகேட்டர் பண்ட் நல்ல தீர்வை வழங்குகிறது. இந்த பண்டானது பங்குகள், கடன் பத்திரம், தங்க மியூச்சுவல் பண்ட்/இடிஎப் ஆகியவற்றில் மதிப்பீட்டு மாதிரியை பயன்படுத்தி நிதி முதலீட்டை மாற்றியமைக்கிறது. 2025 பிப்ரவரி 28 நிலவரப்படி இந்த பண்ட் ஓராண்டில் 6.85%, மூன்றாண்டில் சராசரியாக ஆண்டுக்கு 11.80%, ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 13.69% வருமானத்தை வழங்கியுள்ளது.
- திருப்பதி சிவானந்தம், நிறுவனர், எஸ்விஎஸ் பின்சர்வ் இந்தியா
கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/ பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.