வீட்டுக்கடன் - நிலையான வட்டியா, மாறுபடும் வட்டியா?

By சத்யா

வீ

ட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் கடந்த இரு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வீடு வாங்குவது குறித்து யோசித்து வருபவர்களுக்கு இது சரியான நேரம் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2% வரைக்கும் ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.

சமீபத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதங்களில் எந்த விதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. பணவீக்கம் உயர்ந்திருப்பது, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பது, நிதிப்பற்றாக்குறை குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்த இரு ஆண்டுகளில் வட்டி விகிதம் மேலும் உயரலாம். இந்த நிலையில் வீடு வாங்க நினைப்பவர்கள் நிலையான வட்டியில் கடன் வாங்குவதா அல்லது மாறுபடும் வட்டியில் கடன் வாங்குவதா என்னும் கேள்வி எழுகிறது.

அடிப்படை என்ன?

எந்த வாய்ப்பு சரியானது என்னும் ஆராய்ச்சிக்கு முன்பு அடிப்படையான சில விஷயங்களை அறிந்து கொள்வது முக்கியம். மாறுபடும் வட்டி விகிதம் என்பது அடிப்படை வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு அடிப்படை வட்டி விகிதம் மாறுபடும். உதாரணத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. அதனால் புதிதாக வாங்கும் கடன்களுக்கு 1.80% வரை வட்டி குறைவாக கிடைக்கும். நிலையான வட்டி விகிதம் என்பது, வீட்டுக்கடன் வாங்கும் சமயத்தில் என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதே வட்டி விகிதமே தொடர்ந்து வசூலிக்கப்படும். செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி வங்கிகள் வட்டியை மாற்றும்.

மூன்றாவதாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. இங்கு குறிப்பிட்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் கடனை செலுத்தலாம். குறிப்பிட்ட காலத்துக்கு மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாறிக்கொள்ளலாம். சில வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த மூன்று வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுப்பது?

மாறுபடும் வட்டி?

வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும் போது மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாறுவதுதான் சிறந்த வாய்ப்பு. நீண்ட கால அடிப்படையில் அதிக வட்டியை செலுத்துவது அநாவசியமானது. பொருளாதார மாற்றங்களால் வட்டி விகிதம் குறையும் பட்சத்தில், வீட்டுக்கடனுக்கான வட்டியும் குறையும். ஆனால் தற்போது உள்ளது போல குறைவான வட்டி விகிதம் இருக்கும் சூழலில் நிலை யான வட்டி விகிதத்துக்கு மாறுவதே நல்லது என நினைக்கத் தோன்றும். எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயர்வதற்கான சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனத் தோன்றலாம். இருந்தாலும் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதே சிறப்பானதாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வீட்டுக்கடன் என்பதே நீண்ட காலத் திட்டம். பொருளாதார சூழலை பொறுத்தே வட்டி விகிதம் உயரலாம். அதனால் நிலை யான வட்டி விகிதத்தை எடுக்கும் போது எதிர்காலத்தில் அதிகம் செலுத்துவதற்கான சூழல் உருவாகலாம்.

உதாரணத்துக்கு எஸ்பிஐ 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வீட்டுக்கடனுக்கு 10.15% மாறுபடும் வட்டியில் கடன் வழங்கியது. அடுத்த சில மாதங்களில் வட்டி விகிதம் 10.50% வரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து தற்போது 8.35% இருக்கிறது. ஆனால் 2013-ம் ஆண்டு வீட்டுக்கடனுக்கு 11 மற்றும் 12% நிலையான வட்டியில் கடன் வழங்கப்பட்டது. இரண்டாவ தாக மாறுபடும் வட்டி விகிதத்தை விட நிலையான வட்டி விகிதத்தில் கூடுதல் வட்டி வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கியை எடுத்துக்கொண்டால் ரூ.30 லட்சத்துக்கு மேலான கடனுக்கு நிலையான வட்டி விகிதமாக 9.85% முதல் 10.10% வசூலிக்கப்படுகிறது. ஆனால் மாறுபடும் வட்டி விகிதத்தில் 8.7 சதவீதமே வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அதிக வட்டி விகிதத்தை நீண்ட நாளைக்கு செலுத்தும் போது அதிக தொகையை இழக்க வேண்டி இருக்கும்.

என்ன செய்யலாம்?

இதற்கிடையே இரட்டை வட்டி விகித முறையில், கடன் வாங்கிய பிறகான சில ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் உயராமல் பாதுகாக்க முடியும். உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கி இரட்டை வட்டி விகித முறையில் 8.7% வட்டியில் (மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இணையாக, 3 ஆண்டுகளுக்கு) கடன் வழங்குகிறது. மாறுபடும் வட்டியில் கடன் வாங்கினால் எப்போது வேண்டுமானாலும் வட்டி உயரலாம். ஆனால் இங்கு அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு எந்த உயர்வும் இருக்காது. நிலையான வட்டி விகித முறையில் அதிக வட்டி செலுத்த வேண்டி இருப்பதால் மாறுபடும் வட்டி விகிதமே தற்போதும் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. ரூ.75 லட்ச கடனுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை 8.3 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. சிறப்பான சிபில் மதிப்பெண் இருக்கும் பட்சத்தில் மற்ற வங்கிகளும் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன.

-satya.sontanam@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்